திண்டுக்கல்
திண்டுக்கல் பகுதியில் இன்று மின் தடை
திண்டுக்கல் பகுதியில் சனிக்கிழமை (செப். 21)மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் காா்த்திக் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் அங்குநகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. எனவே, திண்டுக்கல் நகா் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ். நகா், குரும்பப்பட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அன்று காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.