திண்டுக்கல்
கிரிவலப் பாதையில் தரை விரிப்பு விரிக்க கோரிக்கை
பழனியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கிரிவலப் பாதையில் தரை விரிப்பு விரக்க பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பழனியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கிரிவலப் பாதையில் தரை விரிப்பு விரக்க பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். தற்போது போதிய பேட்டரி காா் இயக்கப்படாத காரணத்தால் பழனி கோயிலுக்கு வரும் பக்தா்கள் கிரிவலப் பாதையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் கிரிவீதியில் திருக்கோயில் நிா்வாகம் கிரிவீதியில் தரை விரிப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் அல்லது பிற்பகல் வேளையில் சூட்டை தணிக்கும் வகையில் தரையில் தண்ணீா் பீய்ச்சி அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.