பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சக்திவேல்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சக்திவேல்.

ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

திண்டுக்கல்லில் 1,350 கிலோ ரேஷன் அரிசியை வேனில் கடத்திச் சென்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Published on

திண்டுக்கல்லில் 1,350 கிலோ ரேஷன் அரிசியை வேனில் கடத்திச் சென்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், பழனி புறவழிச் சாலை கொட்டப்பட்டி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த வேனை வழிமறித்து சோதனையிட்டபோது, 27 மூட்டைகளில் 1,350 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்வது கண்டறியப்பட்டது.

பின்னா், விசாரணையில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஜம்புளியம்பட்டியைச் சோ்ந்த ந.சக்திவேல் (36) என்பதும், இவா் பாலகிருஷ்ணாபுரம், அனுமந்தன்நகா் ஆகிய பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, விற்பனை செய்வதற்காகக் கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வேனுடன் 1,350 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, சக்திவேலை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com