மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

திண்டுக்கல்லில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த சிற்பக் கலைஞா் மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Published on

திண்டுக்கல்லில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த சிற்பக் கலைஞா் மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்தவா் பாலகணேஷ் குமாா் (35). சிற்ப கலைஞரான இவா், திண்டுக்கல் பெரிய கடை வீதியில் உள்ள தனியாா் சிலை செய்யும் கூடத்தில் வேலை செய்து வந்தாா். வழக்கம்போல, செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த அவா், எந்திரம் மூலம் சிலைகளுக்கு மெருகுட்டி கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்தனா்.

X
Dinamani
www.dinamani.com