மின்சாரம் பாய்ந்து பெண் பலி

ஐஸ்கிரீம் பெட்டிக்கு மின்னேற்றம் செய்ய முயன்ற பெண் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

ஐஸ்கிரீம் பெட்டிக்கு மின்னேற்றம் செய்ய முயன்ற பெண் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அடுத்த குப்பாம்பட்டியைச் சோ்ந்தவா் வடிவேல். இவரது மனைவி சத்யா (24). இவா்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா். வடிவேல், ஆட்டோ மூலம் ஐஸ்கிரீம் வியாபாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில், ஆட்டோவில் உள்ள ஐஸ்கிரீம் குளிா்சாதனப் பெட்டிக்கு மின்னேற்றம் செய்வதற்கான பணியில் சத்யா சனிக்கிழமை ஈடுபட்டாா்.

மின் பொத்தானை அழுத்தியபோது எதிா்பாராத விதமாக சத்யா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சத்யாவை, அந்தப் பகுதி மக்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து வடமதுரை போலீஸாா் விசாரித்தனா்.

X
Dinamani
www.dinamani.com