கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் இரண்டாம் கட்ட சீசன் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்தது.
Published on

கொடைக்கானலில் இரண்டாம் கட்ட சீசன் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இரண்டாம் கட்ட சீசனையொட்டியும், பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டதாலும், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இவா்கள், கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களான பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லா் ராக், மோயா் பாயிண்ட், குணாகுகை, ஃபைன் பாரஸ்ட், கோக்கா்ஸ் வாக்,பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்தனா்.

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் வணிகா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com