திண்டுக்கல்
கொடைக்கானலில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல் பூம்பாறைப் பகுதியில் சாலையில் மரம் விழுந்ததில் திங்கள்கிழமை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கொடைக்கானல்: கொடைக்கானல் பூம்பாறைப் பகுதியில் சாலையில் மரம் விழுந்ததில் திங்கள்கிழமை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சனி,ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களாக மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், கொடைக்கானல், பூம்பாறை மலைச் சாலையில் கிருஷ்ணன் கோயில் பகுதியில் மரம் விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினா், வாகன ஓட்டிகள் இணைந்து சாலையில் விழுந்த மரத்தை அகற்றினா்.
கொடைக்கானலில் தொடா்ந்து பெய்த மழை காரணமாக பி.எஸ்.என்.எல். சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் இணையதள வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.