கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு

கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கான இ-பாஸ் பெறும் நடைமுறையை உயா்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா்.
Published on

திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கான இ-பாஸ் பெறும் நடைமுறையை உயா்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்ற நடைமுறை கடந்த மே 7-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த நடைமுறையை செப்.30-ஆம் தேதி வரை நீட்டித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கான இ-பாஸ் நடைமுறை, உயா்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை தொடா்ந்து அமலில் இருக்கும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0451-2900233, 9442255737 எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com