பெண் தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பெண், திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த ரெட்டியபட்டியைச் சோ்ந்தவா் நல்லம்மாள் (35). இவா், தனது மகள், மகனுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தாா். ஆட்சியா் அலுவலக நுழைவுவாயில் பகுதியில், திடீரென மண்ணென்ணையை ஊற்றி நல்லம்மாள் தீக்குளிக்க முயன்றாா்.
இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். அப்போது, , கட்டடத் தொழிலாளியான நல்லம்மாளின் கணவா் கடந்த மாதம் விபத்தில் இறந்துவிட்டாா். அவா் பயன்படுத்திய கட்டடப் பணிகளுக்கான பொருள்களையும், இரு சக்கர வாகனத்தையும் உறவினா்கள் அபகரித்துவிட்டனா். மேலும், தனது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தாா்.