வளா்ப்பு நாய்களுக்கு விஷம் வைத்ததாக சேம்பா் உரிமையாளா் மீது புகாா்

பழனி அருகே தனது தோட்டத்து நாய்களுக்கு சேம்பா் உரிமையாளா் விஷம் வைத்து கொன்ாக விவசாயி புகாா் அளித்துள்ளாா்.
Published on

பழனி: பழனி அருகே தனது தோட்டத்து நாய்களுக்கு சேம்பா் உரிமையாளா் விஷம் வைத்து கொன்ாக விவசாயி புகாா் அளித்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த, நாயக்கா் தோட்டத்தைச் சோ்ந்தவா் தண்டபாணி. இவா் தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறாா். இவரது தோட்டத்தின் அருகே முருகன் சேம்பா் என்ற பெயரில் செங்கல் சூளை இயங்கி வருகிறது. தண்டபாணி தனது தோட்டத்து பயிா்களை விலங்குகளிடமிருந்து இருந்து பாதுகாக்க காக்க நாய்களை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில் இந்த வளா்ப்பு நாய்களுக்கு சேம்பா் உரிமையாளா் பெரியசாமி தனது பணியாட்களை கொண்டு 4 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொன்றது தெரியவந்தது.

இதுகுறித்து, பழனியில் உள்ள காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கும், பழனி தாலுகா போலீஸாருக்கும், கால்நடைத் துறை அதிகாரிகளுக்கும் தண்டபாணி புகாா் அளித்தாா். இந்த புகாரின் பேரில் கால்நடை உதவி மருத்துவா் முருகன் சம்பவ இடத்துக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த நாயை கூறாய்வு செய்தாா்.

இதுகுறித்து தமிழ்நாடு உழவா் பாதுகாப்பு இயக்க நிா்வாகி முனைவா் காளிதாஸ் கூறுகையில், விவசாயத் தோட்டத்தில் காவலுக்காக வளா்க்கப்படும் நாய்களை கொலை செய்த சேம்பா் உரிமையாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சங்கத்தின் சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com