புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவருக்கு ரூ.25ஆயிரம் அபராதம்

வடமதுரையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’ வைத்து, உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Published on

வடமதுரையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’ வைத்து, உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையிலுள்ள தேநீா்க் கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

வடமதுரை வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் வசந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையின்போது, ரயில் நிலையம் செல்லும் சாலையில் காளிதாஸ் என்பவரின் தேநீா்க் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, கடையை பூட்டி ‘சீல்’ வைத்து, காளிதாசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

X
Dinamani
www.dinamani.com