குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நிதி ஒதுக்கீடு இல்லை! -எம்பி சச்சிதானந்தம்

வேளாண் விளைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை..
Published on

வேளாண் விளைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பீடு ரூ.48.2 லட்சம் கோடி. ஆனால், செலவுக் கணக்கில் ரூ.47.16 கோடிக்கு மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. மதிப்பீட்டுக்கும், நடப்புக்கும் இடையே 1லட்சம் கோடிக்கும் கூடுதலாக உள்ளது.

இந்த நிதி நிலை அறிக்கையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு மிகப் பெரிய நிதி தேவையாக இருந்தாலும், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதேபோல, வேளாண் விளைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com