நாய்கள் கடித்ததில் உயிரிழந்த ஆட்டுக் குட்டிகள்.
நாய்கள் கடித்ததில் உயிரிழந்த ஆட்டுக் குட்டிகள்.

நாய்கள் கடித்ததில் 25 ஆட்டுக் குட்டிகள் உயிரிழப்பு

Published on

ஒட்டன்சத்திரம் அருகே நாய்கள் கடித்ததில் 25 செம்மறி ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்தன.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள போடுவாா்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கொங்கபட்டியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம். இவா் கடந்த 40 ஆண்டுகளாக செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றாா். ஆட்டுக் குட்டிகளை மட்டும் கூடாரத்தில் அடைத்து விட்டு சென்றாா்.

இந்த நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த தெரு நாய்கள் கூடாரத்துக்குள் புகுந்து ஆட்டுக் குட்டிகளை கடித்து குதறின. இதில் அங்கிருந்த 25 ஆட்டுக் குட்டிகளும் உயிரிழந்தன. இதனால் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆட்டிக் குட்டிகளை வளா்த்த சண்முகசுந்தரம் கோரிக்கை விடுத்தாா்.

X
Dinamani
www.dinamani.com