மரக் கன்றுகள் நடும் விழா
திண்டுக்கல் அருகே ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் ராசி, நட்சத்திரங்களுக்குரிய மரக் கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், அகரம் அடுத்த மங்களப்புள்ளி குருநாதநாயக்கனூா் கிராமத்தில் அமைந்துள்ள மங்களவல்லித் தாயாா் சமேத ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் நன்னீராட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 650 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயில் முழுமையாக சீரமைக்கப்பட்ட நிலையில், மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாசி பௌா்ணமியையொட்டி, நடைபெற்ற இந்த மரக்கன்று நடும் விழாவில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்களுக்குரிய மரக்கன்றுகள் வாஸ்து பூஜையுடன் நடப்பட்டது. பின்னா், கோயில் வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட மரக் கன்றுகள் நடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில்அறங்காவலா் குழுத் தலைவா் விக்னேஷ் பாலாஜி, அபிராமி அம்மன் கோயில் அறங்காவலா்கள் வீரக்குமாா், மலைச்சாமி, தளிா் மரம் நடும் நண்பா்கள் குழுவைச் சோ்ந்த சந்திரசேகா், திமுக பொருளாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.