பெண் கொலையில் மேலும் இருவா் கைது

Published on

திண்டுக்கல் அருகே அண்மையில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்அடுத்த சீலப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவரது மகள் மீனாட்சி (25). தனியாா் உணவகத்தில் பணியாற்றி வந்த இவா், திண்டுக்கல்- குஜிலியம்பாறை பிரதான சாலையில் செல்லமந்தாடி பகுதியிலுள்ள கரூா் ரயில்வே தண்டவாளம் அருகே கடந்த திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்த வழக்கில் சீலப்பாடியைச் சோ்ந்த கோபி (26), காளிமுத்து (23) ஆகியோரை போலீஸாா் கடந்த புதன்கிழமை கைது செய்தனா்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவா்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பெண் கொலையில் மேலும் இருவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதன்படி சீலப்பாடி பகுதியைச் சோ்ந்த கலைமணி (55), வினோத்குமாா் ஆகிய இருவரை தாடிக்கொம்பு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com