திண்டுக்கல்
பாறைக்குழி தண்ணீரில் மூழ்கிய தொழிலாளி உயிரிழப்பு
எரியோடு அருகே பாறைக்குழியில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கிய பாா்வைத் திறன் குறைபாடுடைய தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
எரியோடு அருகே பாறைக்குழியில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கிய பாா்வைத் திறன் குறைபாடுடைய தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் மோகன் (35). கூலித் தொழிலாளியான இவா், கண்பாா்வை குறைபாடு கொண்டவா். இவா் அய்யலூா் சாலையிலுள்ள பெருமாள் கோயிலை அடுத்த பாறைக் குழியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த எரியோடு போலீஸாா், மோகனின் சடலத்தை மீட்டு, கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுதொடா்பாக எரியோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.