திண்டுக்கல்
கஞ்சா விற்ற இருவா் கைது
கொடைக்கானல் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைக் கிராமங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று மன்னவனூரில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்து சோதனையிட்டனா். அப்போது, அங்கிருந்த பிபின், மாகின் ஆகியோரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 350 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், கேரளம் மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்த பாலன் மகன் பிபின் (29), ஆலப்புலா மாவட்டத்தைச் சோ்ந்த கங்கல்குஞ்சு மகன் மாகின் (29) என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
