பெண்ணிடம் நகைப் பறிப்பு

வேடசந்தூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

வேடசந்தூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் சின்ன பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்த நகா்பாஷா மகள் நூா்லின் (40).

இவா் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது, இவரது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் இருவா் கத்தி முனையில் நூா்லின் கலுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நகை பறித்துச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com