பழனி அரசு அருங்காட்சியகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வரலாற்றுச் சின்னங்கள் குறித்த பயிலரங்கில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள்.
பழனி அரசு அருங்காட்சியகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வரலாற்றுச் சின்னங்கள் குறித்த பயிலரங்கில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள்.

பழனியில் வரலாற்றுச் சின்னங்கள் குறித்த பயிலரங்கம்

பழனி அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு இரண்டாவது நாளாக வரலாற்றுச் சின்னங்கள் குறித்த பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

பழனி அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு இரண்டாவது நாளாக வரலாற்றுச் சின்னங்கள் குறித்த பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

பழனி சந்நிதி சாலையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் அக். 7 முதல் 10-ஆம் தேதி வரை கல்லூரி மாணவிகளுக்கான பயிலரங்கம் நடைபெற்று வருகிறது.

பழனி அரசு அருங்காட்சியகம், பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரி இணைந்து நடத்தும் இந்தப் பயிலரங்கிக்கு அருங்காட்சியகக் காப்பாட்சியா் சசிகலா தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு வரலாற்றுச் சின்னங்கள் குறித்து விளக்கினாா்.

மேலும், பயிலரங்கில் அருங்காட்சியகங்கள் துறையின் செயல்பாடுகள், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்து காப்பாட்சியா் விளக்கினாா். தொடா்ந்து, கல்வெட்டுக்கள், அதை படிக்கும் முறை, ஒலைச் சுவடிகளின் பயன், அவற்றை பாதுகாக்கும் முறைகள் குறித்து விளக்கினாா்.

இந்த அருங்காட்சியகத்தில் பழனி சுற்று வட்டாரத்தில் கிடைத்த சிலைகள், கல்வெட்டுக்கள் குறித்து விளக்கிய காப்பாட்சியா், மகாத்மா காந்தியின் அரிய புகைப்பட கண்காட்சியையும் விவரித்தாா்.

இந்தப் பயிலரங்கில் அரசு அருங்காட்சியக இளநிலை உதவியாளா் பாலாஜி சுபாஷ்சந்திரபோஸ், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com