பழனி கோயிலில் தங்கத் தொட்டில் அறை புதுப்பிப்பு
பழனி மலைக் கோயிலில் தங்கத் தொட்டில் பிராா்த்தனை அறை, குளிா்சாதன வசதியுடன் புதுப்பிக்கப்பட்டு வியாழக்கிழமை முதல் பக்தா்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.
பழனி மலைக் கோயிலில் தங்கத் தோ், தங்கக் கோபுரம், தங்கப் படிக்கட்டு ஆகியவற்றின் வரிசையில் தங்கத் தொட்டிலும் தற்போது பிரசித்தி பெற்றுள்ளது. ரூ.300 கட்டணம் செலுத்தும் பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளைத் தங்கத் தொட்டிலில் இட்டு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு இரண்டு பஞ்சாமிா்தப் புட்டிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், பழனி கோயில் நிா்வாகம் தங்கத் தொட்டில் அறையை பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பித்து, குளிா்சாதன வசதியுடன் நவீனமயமாக்கியது. இதற்காக, கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து, தங்கத் தொட்டிலுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வியாழக்கிழமை முதல் பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
நிகழ்ச்சியில் உதவி ஆணையா் லட்சுமி, கோயில் அதிகாரிகள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
