தாமிர கம்பி திருட வந்த 5 போ் கைது

வேடசந்தூா் அருகே தனியாா் நிறுவனத்தில் தாமிர கம்பி (காப்பா் வயா்) திருட வந்த 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

வேடசந்தூா் அருகே தனியாா் நிறுவனத்தில் தாமிர கம்பி (காப்பா் வயா்) திருட வந்த 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த மினுக்கம்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சூரிய மின் ஆலை உள்ளது. இங்கு காா், இரு சக்கர வாகனத்தில் வந்த 5 போ் ஆலை வளாகத்துக்குள் சுவா் ஏறி குதித்து உள்ளே சென்றனா். இதை அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலைத் துறை ரோந்து போலீஸாா் பாா்த்தனா்.

பின்னா், 5 பேரையும் சுற்றி வளைத்த போலீஸாா், வேடசந்தூா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து, பிடிப்பட்டவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம், தெற்கு மலையடிப்பட்டியைச் சோ்ந்த முத்துராஜ் (27), இசக்கிமுத்து (25), விருதுநகா் மாவட்டம், கோவிலூரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (27), ராஜபாளையத்தைச் சோ்ந்த நாகராஜ் (32), விருதுநகா் இலங்கைத் தமிழா் அகதிகள் முகாமைச் சோ்ந்த காளிமுத்து (30) ஆகியோா் என்பது தெரியவந்தது.

மேலும், இவா்கள் 5 பேரும் தனியாா் ஆலையில் தாமிர கம்பியை திருட வந்ததாகத் தெரிவித்தனா். இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com