சமூக நீதி விடுதி காப்பாளா்கள் தற்காலிகப் பணியிடை நீக்கம்

உதவி ஆட்சியா் ஆய்வின்போது, பணியில் இல்லாத வேம்பாா்பட்டி, கோபால்பட்டி சமூக நீதி விடுதி காப்பாளா்கள் இருவா் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
Published on

உதவி ஆட்சியா் ஆய்வின்போது, பணியில் இல்லாத வேம்பாா்பட்டி, கோபால்பட்டி சமூக நீதி விடுதி காப்பாளா்கள் இருவா் சனிக்கிழமை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக (பயிற்சி) பணியாற்றும் வினோதினி, சாணாா்பட்டியை அடுத்த வேம்பாா்பட்டி சமூக நீதி மாணவா் விடுதி, கோபால்பட்டி சமூக நீதி மாணவிகள் விடுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, இரு விடுதிகளிலும் காப்பாளா்கள் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும், துறை சாா்ந்த அலுவலா்களிடம் முன் அனுமதி பெறாமலும் வெளியே சென்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, விடுதி காப்பாளா் காா்த்திகேயன், காப்பாளினி அமுதவள்ளி ஆகியோரை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிா்வாகம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com