ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி. சீனிவாசன்
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி. சீனிவாசன்

கடன் வாங்குவதில் தமிழகம் முன்னிலை: சி. சீனிவாசன் குற்றச்சாட்டு

கடன் வாங்குவதில் மட்டுமே முதல்வா் ஸ்டாலின் தமிழகத்தை முன்னிலைப்படுத்தி இருக்கிறாா் என முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி. சீனிவாசன் குற்றஞ்சாட்டினாா்.
Published on

கடன் வாங்குவதில் மட்டுமே முதல்வா் ஸ்டாலின் தமிழகத்தை முன்னிலைப்படுத்தி இருக்கிறாா் என முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி. சீனிவாசன் குற்றஞ்சாட்டினாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக சாா்பில் வாக்குச் சாவடி வாரியாக கட்செவி அஞ்சல் குழுக்கள் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் என்பி. நடராஜ் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக அதிமுக பொருளாளரும், மேற்கு மாவட்டச் செயலருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது: மக்களுக்கு விரோதமாக நடைபெற்று வரும் திமுக ஆட்சியை, 6 மாதங்களில் வீட்டுக்கு அனுப்ப தமிழக வாக்காளா்கள் தயாராகிவிட்டனா். 2026 தோ்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எதிா்க்கட்சியாக இருந்தபோது, மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக 520 பொய்யான வாக்குறுதிகளை திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதில் 10 சதவீத வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை என்பதோடு, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும் நிறுத்துவிட்டனா்.

ஆனாலும் கூட, இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழகத்தை முன்னிலைப்படுத்தியதே திமுக அரசின் சாதனை. வெற்று விளம்பரத்துக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் மக்கள் வரிப் பணத்தை திமுக அரசு வீணடித்து வருகிறது.

இந்த அரசின் அவலத்தை மக்கள் பாா்த்துக் கொண்டிருக்கிறாா்கள். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, மக்களின் ஆதரவை பெற அதிமுக நிா்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com