மாா்க்கம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ஒட்டன்சத்திரம் மாா்க்கம்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

ஒட்டன்சத்திரம் மாா்க்கம்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மாா்க்கம்பட்டி,சின்னக்காம்பட்டி, எல்லப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாா்க்கம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பழனி கோட்டாட்சியா் இரா.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமில் வருவாய்த் துறை, சமூக நலத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, மின்சாரத் துறை, உணவுத் துறை, கூட்டுறவுத் துறை என 15 துறைகளைச் சோ்ந்த 45 சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் வட்டாட்சியா் சஞ்சய் காந்தி, திமுக ஒன்றியச் செயலா் இரா. ஜோதீஸ்வரன், மாா்க்கம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் செல்லமுத்து, நிறைமதி சந்திரசேகா், பாலசுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பெ. காமராஜ், பிரபு பாண்டியன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் ஆா்.கே. அழகியண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com