வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!
வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மைய உதவி இயக்குநா் ச. பிரபாவதி தெரிவித்ததாவது:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியைப் பதிவு செய்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது.
10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதோா், எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2, பட்டப் படிப்பைப் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவுற்று 2025 செப். 30-ஆம் தேதி வரை தொடா்ந்து புதுப்பித்து வருவோா் அக்டோபா் முதல் உதவித்தொகை பெறலாம். மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது.
மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் இணையதளத்தில் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து முழுமையாக நிறைவு செய்து வருகிற நவ. 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.
