கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு: வியாபாரிகள் கவலை

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு: வியாபாரிகள் கவலை

கொடைக்கானலில் விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையால் வெறிச்சோடிக் காணப்பட்ட ஏரிச்சாலைப் பகுதி.
Published on

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால் வியாபாரிகள் கவலையடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக அதிக மேக மூட்டத்துடன் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வருகிற 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா இடங்கள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், பெரும்பாலான கடைகளும் திறக்கப்பட வில்லை. இதன் காரணமாக வியாபாரிகள் கவலையடைந்தனா். சாரல் மழையால் பள்ளி, மாணவா்களும், பொதுமக்களும் சிரமமடைந்து வருகின்றனா். மேலும் கடந்த சில தினங்களாக நட்சத்திர ஏரியில் படகு சவாரியும் நடைபெற வில்லை.

பிரையண்ட் பூங்காவில் செடிகள் சேதம்: கொடைக்கானலில் விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையால் பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் ஆகியவற்றில் மலா்கள் சேதமடைந்தன. இவற்றை அங்குள்ள பணியாளா்கள் அகற்றியும், மலா்பாத்திகளில் தேங்கிய மழை நீரை அகற்றியும், களையெடுத்தும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com