ஒட்டன்சத்திரத்தில் விபத்திலா
தீபாவளி குறித்து விழிப்புணா்வு

ஒட்டன்சத்திரத்தில் விபத்திலா தீபாவளி குறித்து விழிப்புணா்வு

ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் விபத்திலா தீபாவளியை கொண்டாவது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்திய தீயணைப்பு வீரா்கள்.
Published on

ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்புத் துறை சாா்பில் விபத்தில்லா தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவது, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகியவை செயல்முறை விளக்கமாக செய்து காட்டப்பட்டன.

இதற்கு தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இந்த ஒத்திகை நிகழ்வில் தீபாவளி அன்று பட்டாசுகளை எவ்வாறு வெடிப்பது, சமையல் எரிவாயு உருளையில் தீப்பற்றிக் கொண்டால் எவ்வாறு அணைப்பது, கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டால் எவ்வாறு தப்புவது, மழைக் காலங்களில் இடி, மின்னலில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு விபத்துக்கள் குறித்து தீயணைப்பு வீரா்கள் செயல்முறை விளக்கமளித்தனா். இதில் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com