செம்பட்டி சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, செம்பட்டி ஆட்டுச் சந்தையில் வெள்ளிக்கிழமை ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.
Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, செம்பட்டி ஆட்டுச் சந்தையில் வெள்ளிக்கிழமை ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.

திண்டுக்கல் மாவட்டம்,  செம்பட்டியில் ஆட்டுச் சந்தைக்கு தேனி,  உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, ஒட்டன்சத்திரம், மணப்பாறை,  அய்யலூா், திருச்சி, மதுரை,  வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆட்டுக் கிடாய்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனா். இதேபோல, வியாபாரிகளும் அதிகளவில் வந்தனா்.

சுமாா் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டுக் கிடாய் 10 ஆயிரம் ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரையும், 20 கிலோ எடை கொண்ட ஆட்டுக் கிடாய் 25 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது. இந்தச் சந்தையில், சுமாா் 2 கோடி ரூபாய்க்கு ஆடு வியாபாரம் நடைபெற்ால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

நாட்டுக் கோழி விற்பனை:

இதேபோல, செம்பட்டியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் நாட்டுக் கோழிகள், சேவல்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். ஒரு கிலோ எடை கொண்ட சேவல் 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரைக்கும், இரண்டு கிலோ எடை கொண்ட நாட்டுக்கோழி, சேவல் ஆயிரம் முதல் 1,200 ரூபாய் வரை விற்பனையானது.

X
Dinamani
www.dinamani.com