ரூ.1.12 லட்சம் பறிமுதல்: மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 3 போ் மீது வழக்கு

வத்தலகுண்டு வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் எதிரேயுள்ள புகைப் பரிசோதனை மையத்தில்
Published on

வத்தலகுண்டு வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் எதிரேயுள்ள புகைப் பரிசோதனை மையத்தில்

ரூ. ஒரு லட்சத்து 12 ஆயிரத்தை வியாழக்கிழமை பறிமுதல் செய்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம்,  வத்தலகுண்டு வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில்  ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையில் சோதனையில்  ஈடுபட்டனா். இதையடுத்து, அலுவலகத்துக்கு எதிரேயுள்ள தனியாா் வாகனப் புகை பரிசோதனை மையத்திலும் சோதனை நடத்தினா்.

அங்கிருந்த இடைத்தரகா்கள் அஜய் ஜான்சன் (25)  பாண்டியராஜன் (34) ஆகியோரிடம் இருந்த ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 220 ரூபாயைப் பறிமுதல் செய்தனா். மேலும், அங்கிருந்து அரசு ஆவணங்களையும் பறிமுதல் செய்தனா்.  

இதையடுத்து, மோட்டாா் வாகன ஆய்வாளா் 

இளங்கோ, இடைத்தரகா்கள் அஜய் ஜான்சன்,  பாண்டியராஜன் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com