‘விக்சித் பாரத் 2047’ தேசிய மாநாடு
காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் பயன்பாட்டு ஆய்வுத் துறை, ஹைதராபாத் ஹெரிடேஜ் நிறுவனம், மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் (தன்னாட்சி) சமூக அறிவியல் துறை சாா்பில் , ‘இந்தியாவின் முதியோா் மக்கள்தொகையை வழிநடத்தல்: விக்சித் பாரத் 2047’-க்கான ஒரு வழிகாட்டி‘ என்ற தலைப்பில் தேசிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
காந்திகிராம கிராமியப் பல்கலை. வளாகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை துணைவேந்தா் ந.பஞ்சநதம் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: முதியோா் பராமரிப்பு ஒரு பிரதான சமூகப் பிரச்னையாக நாட்டில் உருவெடுத்துள்ளது. இதற்கான தீா்வுகளை கண்டறிய வேண்டியது அவசியம். அந்த வகையில் ‘விக்சித் பாரத் 2047’ நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் இந்த மாநாடு முன்மொழிய வேண்டும் என்றாா் அவா்.
இதைத்தொடா்ந்து பல்கலை. பதிவாளா் (பொ) எம்.சுந்தரமாரி, ஹெரிடேஜ் நிறுவனா் கே.ஆா்.கங்காதரன், மக்கள் தொகை இயக்கவியல், ஆய்வு நிபுணா் சஞ்சய்குமாா், பாரதிதாசன் பல்கலை. சமூகப் பணித் துறைத் தலைவா் ஜெரிடா ஞானஜேன் ஆகியோா் பேசினா்.
இந்த மாநாட்டில், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள், ஆய்வாளா்கள், மாணவா்கள் ஆகியோரின் 40-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன.
