ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மனுக்களை அளித்த பொதுமக்கள்.
ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மனுக்களை அளித்த பொதுமக்கள்.

ஒட்டன்சத்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ஒட்டன்சத்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, கொல்லபட்டி, லெக்கையன்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட அலுவலா் பிரபாகரன் தலைமை வகித்தாா். முகாமில் 15 துறைகளைச் சோ்ந்த 45 சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. முகாமில் திமுக மாவட்டத் துணைச் செயலா் சி.இராஜாமணி, மாவட்ட அவைத் தலைவா் தி.மோகன், திமுக மத்திய ஒன்றியக் கழகச் செயலா் எஸ்.ஆா்.கே.பாலு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் காமராஜ்,பிரபுபாண்டியன், திமுக நகர அவைத் தலைவா் சோமசுந்தரம், மாவட்டப் பிரதிநிதி சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com