சாலையோரக் கடைகளில் அழுகிய மீன்கள் பறிமுதல்

பழனி நகராட்சி நிா்வாகம் சாா்பில் சாலையோர மீன் கடைகளிலிருந்து அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Published on

பழனி: பழனி நகராட்சி நிா்வாகம் சாா்பில் சாலையோர மீன் கடைகளிலிருந்து அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் பொதுமக்கள் பலரும் இறைச்சிக் கடைகளில் குவிந்து வரும் நிலையில் மீன் கடைகளில் அழுகிய மீன்கள் விற்கப்படுவதாகத் தகவல் பரவியது. இதையடுத்து நகராட்சி ஆணையா் டிட்டோ உத்தரவின்பேரில் நகராட்சி நகா் நல அலுவலா் அரவிந்த் கிருஷ்ணன், சுகாதார அலுவலா் செந்தில்ராம்குமாா், சுகாதார ஆய்வாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட குழுவினா் பழனியில் உள்ள மீன் கடைகளில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், ரயிலடி சாலையில் உள்ள மூன்று சாலையோர மீன் இறைச்சி விற்பனைக் கடைகளில் சமைப்பதற்கு தகுதியில்லாத அழுகிய மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்தக் கடைகளில் இருந்து ஐம்பது கிலோ எடையிலான மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com