சின்னாளபட்டியில் கொசுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

சின்னாளபட்டி பேரூராட்சியில் கொசுக்களை ஒழிக்கும் வகையில் புதன்கிழமை முதல் கொசு ஒழிக்கும் புகை மருந்து அடிக்கும் பணி தொடங்கியது.
Published on

நிலக்கோட்டை: சின்னாளபட்டி பேரூராட்சியில் கொசுக்களை ஒழிக்கும் வகையில் புதன்கிழமை முதல் கொசு ஒழிக்கும் புகை மருந்து அடிக்கும் பணி தொடங்கியது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலா் இளவரசி கூறியதாவது:

மாவட்ட ஆட்சியா், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் உத்தரவின்பேரில்,  சின்னாளபட்டி நகா் முழுவதும் கொசுக்களை ஒழிக்கும் புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தினசரி வந்து செல்லும் கடை வீதிகள், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னுரிமை கொடுத்து கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்படுகிறது.

தினசரி ஒரு வாா்டு வீதம் ஒவ்வொரு வாா்டாக கொசு ஒழிக்கும் புகை மருந்து அடிக்கப்படும். கழிவு நீா் அதிகம் தேங்கியுள்ள பகுதிகளில் வாரம் இருமுறை கொசு ஒழிக்கும் மருந்துகள் தெளிக்கப்படும்.

மேலும், குடிநீா் விநியோகம் செய்யும் இடங்களில் குளோரினை முறையாகக் கலப்பதையும் கண்காணித்து வருகிறோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com