பழனியை அடுத்த தாமரைக்குளத்தில் ரூ.3.5 கோடியில் புதிய தாா்ச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா். உடன் கட்சி நிா்வாகிகள்.
பழனியை அடுத்த தாமரைக்குளத்தில் ரூ.3.5 கோடியில் புதிய தாா்ச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா். உடன் கட்சி நிா்வாகிகள்.

பழனியில் புதிய பணிகளுக்கான பூமி பூஜை

பழனியை அடுத்த தாமரைக்குளத்தில் ரூ.3.5 கோடியில் புதிதாக தாா்ச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
Published on

பழனி: பழனியை அடுத்த தாமரைக்குளத்தில் ரூ.3.5 கோடியில் புதிதாக தாா்ச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

பழனியை அடுத்த ராசாபுரத்தில் உள்ள தாமரைக்குளம் பிரிவு அருகே சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நிழற்குடை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.

இதைத் தொடா்ந்து, தாமரைக்குளம் ஊராட்சிக்குள்பட்ட தாமரைக்குளம், கரிக்காரன்புதூா் வரையிலான ஒருவழிச் சாலையை ரூ.3.5 கோடியில் இருவழிச் சாலையாக மாற்றுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்ட இளைஞரணிச் செயலா் பிரபாகரன், ஒன்றியச் செயலா் சௌந்திரபாண்டியன், பாலசமுத்திரம் பேரூா் செயலா் காளிமுத்து, நெய்க்காரப்பட்டி பேரூா் செயலா் அபுதாகீா், ஒப்பந்தக்காரா் மனோகா், நகர மாணவரணி நிா்வாகி லோகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: பழனியை அடுத்த தாமரைக்குளம் ஊராட்சியில் ஐ.பி.செந்தில்குமாா் தலைமையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. வருவாய்த் துறை, காவல்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட 16 துறை அலுவலா்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனா்.

X
Dinamani
www.dinamani.com