பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் கபடிப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற குருவப்பா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள்.
பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் கபடிப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற குருவப்பா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள்.

கபடிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாணவா்கள்

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கபடிப் போட்டியில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றனா்.
Published on

பழனி: பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கபடிப் போட்டியில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றனா். மேலும், அனைவரும் மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றனா்.

திண்டுக்கல் மாவட்டப் பள்ளி அளவிலான கபடிப் போட்டிகள் சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், நத்தம், ஆத்தூா், நிலக்கோட்டை, ரெட்டியாா்சத்திரம், பழனி தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூா், கொடைக்கானலைச் சோ்ந்த பத்து அணிகள் கலந்துகொண்டன.

இதில், நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 14 வயது, 17 வயது, 19 வயது என மூன்று பிரிவுகளிலும் கபடிப் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளி வளாகத்தில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். பள்ளிக் குழு உறுப்பினா் ராஜா கௌதம், தலைமையாசிரியா் சுப்பிரமணி, உதவி தலைமையாசிரியா்கள் கல்பனா, நாகராஜ், உடல்கல்வி இயக்குநா் ரவிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com