கொடைக்கானல் கிளாவரை செல்லும் மலைச்சாலையில் உருண்டு விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம்.
கொடைக்கானல் கிளாவரை செல்லும் மலைச்சாலையில் உருண்டு விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம்.

கொடைக்கானல் மலைச்சாலைகளில் பாறைகளை அகற்றும் பணி தீவிரம்

Published on

கொடைக்கானல் மலைச் சாலைகளில் உருண்டு விழுந்த பாறைகள், மரங்களை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த 5 நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து மழை பெய்தது. அப்போது மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளில் பாறைகள் உருண்டும், மரங்கள் முறிந்தும் விழுந்தன.

இவற்றை போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலைகளின் ஓரத்தில் மாற்றி வைத்தனா். இருப்பினும் பேருந்துகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, அந்தப் பாறைகளையும், மரங்களையும் நெடுஞ்சலைத் துறையினா் முழுவதுமாக அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா். இதையடுத்து, போக்குவரத்து சீரானது.

X
Dinamani
www.dinamani.com