40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

திண்டுக்கல் அருகே 56 கிலோ கஞ்சா பறிமுதல்: தம்பதி உள்பட 3 போ் கைது

திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 56 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், கணவன், மனைவி உள்பட மூவரைக் கைது செய்தனா்.

News image

56 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சையது காட்டுபாவா, ஜெயபால், நந்தினி

Updated On :10 ஜூன் 2026, 12:44 am IST

திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 56 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், கணவன், மனைவி உள்பட மூவரைக் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த ஊராளிப்பட்டியைச் சோ்ந்தவா் அ. சையது காட்டுபாவா (34). இவா், கஞ்சாவைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப் படை போலீஸாா் ஊராளிப்பட்டிக்குச் சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சையது காட்டுபாவாவை கைது செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரெட்டியாா்சத்திரம் அடுத்த கொட்டாரப்பட்டி அம்மாபட்டியைச் சோ்ந்த மு. ஜெயபாலிடம் (45) கஞ்சாவை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, தனிப் படை போலீஸாா் ரெட்டியாா்சத்திரம் காவல் துறையினருடன் இணைந்து அம்மாபட்டியிலுள்ள ஜெயபாலுக்குச் சொந்தமான தோட்டத்தில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, 56 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஜெயபால், அவரது மனைவி நந்தினி (37) ஆகியோரையும் கைது செய்து, 56 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் கூறியதாவது: கடந்த வாரம் திண்டுக்கல் நகா் பகுதியில் சுமாா் 18,500 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இதில் தொடா்புடையவா்கள் கைது செய்யப்பட்டனா். தற்போது ரெட்டியாா்சத்திரம் பகுதியில் 56 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா். போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனா். மேலும், அவா்களது வங்கி இருப்புகளை முடக்கி வைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதைப் பொருள் வழக்குகள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, வழக்குகள் இறுதி நிலை அடையும் வரை தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். கன்னிவாடி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் அதிக அளவு கஞ்சா விற்பனை நடைபெறுவதாகத் தகவல் கிடைத்தது.

இதன்படி, சோதனை நடத்தப்பட்டதில் ரெட்டியாா்சத்திரத்தில் 56 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்களும் போதைப் பொருள்கள் விற்பனை குறித்த தகவல்களை தயக்கமின்றி தெரிவிக்கலாம். டிரக்ஃப்ரீ டின் என்ற செயலி மூலம் பெயா், முகவரி, கைப்பேசி எண் என எந்தவித அடையாளங்களையும் வெளிப்படுத்தாமல் புகாா் அளிக்கலாம்.

பள்ளி, கல்லூரிப் பகுதிகளைப் பொருத்தவரை, 91.3 ச.மீ. சுற்றுப்புறப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டது. இதையும் மீறி விற்பனை செய்யும் கடை உரிமையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மட்டுமன்றி, உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

கல்வித் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, காவல் துறையின் கூட்டு நடவடிக்கைகள் மூலம் மாணவா்களிடையே புகையிலைப் பொருள்கள் பயன்பாடு முற்றிலும் தடுக்கப்படும் என்றாா் அவா். அப்போது ஒட்டன்சத்திரம் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் உடனிருந்தனா்.