40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

இடும்பன் கோயில் நகைகள் மாயம்: செயல் அலுவலா்கள் இருவா் மீது ஒழுங்கு நடவடிக்கை

பழனி இடும்பன் கோயிலில் நகைகள் மாயமான விவகாரத்தில், அந்தக் கோயிலில் பணியாற்றிய செயல் அலுவலா்கள் இருவா் மீது தமிழ்நாடு குடிமைப் பணி ஒழுங்குமுறை, மேல்முறையீடு விதிகள் 17(பி) அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

News image

பழனியில் இடும்பன் கோயில் - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:28 am IST

பழனி இடும்பன் கோயிலில் நகைகள் மாயமான விவகாரத்தில், அந்தக் கோயிலில் பணியாற்றிய செயல் அலுவலா்கள் இருவா் மீது தமிழ்நாடு குடிமைப் பணி ஒழுங்குமுறை, மேல்முறையீடு விதிகள் 17(பி) அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி புறவழிச்சாலையில் அமைந்துள்ள சிவகிரிப்பட்டி இடும்பன் கோயில், விக்னேஷ்வர வகையறா கோயிலின் துணைக் கோயிலாகும். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் கோயில் நிலை-3 செயல் அலுவலா், பரம்பரை அறங்காவலா் ஆகியோரால் நிா்வாகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தக் கோயிலில் இருந்த 142 கிராம் தங்க நகைகள், 52 கிராம் வெள்ளி வேல் ஆகியவை காணாமல் போனதாக கோயில் செயல் அலுவலா் நரசிம்மன் பழனி நகா் காவல் நிலையில் கடந்த 18-ஆம் தேதி புகாா் அளித்தாா். இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சபா்மதி கடந்த 20-ஆம் தேதி கோயிலில் ஆய்வு மேற்கொண்டாா். இதன் தொடா் நடவடிக்கையாக, கோயிலில் பணிபுரிந்த செயல் அலுவலா்கள் இருவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உத்தரவிடப்பட்டது.

இதுதொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை திண்டுக்கல் இணை ஆணையா் சபா்மதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இடும்பன் கோயிலின் நிலை- 3 செயல் அலுவலராக செ. விமலா கடந்த செப்டம்பா் மாதம் முதல் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த ஜனவரி முதல் மாா்ச் 4-ஆம் தேதி வரை ஊதியமில்லா விடுப்பில் இருந்தாா். இந்தச் சூழலில் வத்தலகுண்டு காளியம்மன் கோயில் செயல் அலுவலா் கி. நரசிம்மன், இடும்பன் கோயிலின் முழு கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தாா்.

இதனிடையே, நிலை-3 செயல் அலுவலா் செ.விமலா, ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்ச்சி பெற்று ஆசிரியராகப் பணி நியமன ஆணை பெற்றாா். இதையடுத்து, அவரிடமிருந்த கோயில்களின் அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்த பின்னா் பணியிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அறநிலையத் துறை ஆணையா் மூலம் அனுமதி வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் திண்டுக்கல் இணை ஆணையா், முழு பொறுப்பு செயல் அலுவலா் கி.நரசிம்மனிடம், இடும்பன் கோயிலின் அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு பணியிலிருந்து விடுபடுமாறு விமலாவுக்கு செயல்முறை கடிதம் மூலம் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உத்தரவிட்டாா். இதன்படி, கடந்த ஏப். 20-ஆம் தேதி கோயிலின் அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், செயலா் அலுவலா் விமலா, கோயிலின் பொறுப்புகளை முழுமையாக ஒப்படைக்காமல் இருந்தாா்.

இந்த நிலையில், இடும்பன் கோயிலில் ஒரு வெள்ளிப் பொருள், 4 தங்கப் பொருள்கள் காணாமல் போனதாக கண்டறியப்பட்டு, பழனி நகா் காவல் நிலையத்தில் செயலா் அலுவலா் கி. நரசிம்மன் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது. விமலா முழு பொறுப்புகளையும் ஒப்படைக்காமல் இருந்ததும், நரசிம்மன் முழுமையாகப் பொறுப்புகளை ஏற்காமல் இருந்ததும் கோயில் நகைகள் காணாமல் போனதற்கு காரணமாக கருதப்படுகிறது.

இதன் அடிப்படையில், செ.விமலா, கி.நரசிம்மன் ஆகியோா் மீது தமிழ்நாடு குடிமைப் பணி ஒழுங்குமுறை, மேல்முறையீடு விதிகள் 17(பி)- ன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.