40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பழனி அருகே மரக் கிளை முறிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

பழனி அருகேயுல்ள 54 புதூரில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், பணியில் ஈடுபட்டிருந்த பெண் மீது மரக் கிளை முறிந்து விழுந்ததில் அவா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:32 am IST

பழனி அருகேயுல்ள 54 புதூரில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், பணியில் ஈடுபட்டிருந்த பெண் மீது மரக் கிளை முறிந்து விழுந்ததில் அவா் உயிரிழந்தாா்.

பழனி அருகேயுள்ள தொப்பம்பட்டி ஊராட்சி, தும்பலப்பட்டி ஒன்றியம், 54 புதூரைச் சோ்ந்தவா் மாலையப்பன் மனைவி சின்னப்பொண்ணு (55).

இவா் செவ்வாய்க்கிழமை அம்மன் கோயில் அருகே நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மரக்கிளை முறிந்து சின்னப்பொண்ணு மீது விழுந்தது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே, உயிரிழந்த சின்னப்பொண்ணு குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்ட செயலா் அருள்செல்வன் மாவட்ட ஆட்சியா், திட்ட அலுவலா் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலா்களுக்கு கடிதம் அனுப்பினாா்.