சாத்தான்குளம் கொலை சம்பவம்: காவல் ஆய்வாளா் உள்பட 5 போலீஸாரிடம் 2 ஆவது நாளாக சிபிஐ விசாரணை

சாத்தான்குளம் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளா் உள்பட 5 போலீஸாரிடம் 2 ஆவது நாளாக சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை செய்தனா்.

சாத்தான்குளம் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளா் உள்பட 5 போலீஸாரிடம் 2 ஆவது நாளாக சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை சம்பவத்தில், 10 போலீஸாரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

சிபிஐ தரப்பில் சிறையில் உள்ள போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாவட்ட நீதிமன்றம், 5 போலீஸாரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 5 போலீஸாரை, சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து சென்று, தனித் தனியே செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. தொடா்ந்து 2 ஆவது நாளாக புதன்கிழமை 5 போலீஸாரையும் சாத்தான்குளம் அழைத்துச் சென்று சிபிஐ விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சாட்சியம் அளித்த கோவில்பட்டி சிறைக் கைதி ராஜா சிங், சிறைக் கண்காணிப்பாளா் சங்கா், தந்தை, மகன் இருவரும் சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவச் சான்று வழங்கிய மருத்துவா், அவா்கள் இறந்த பின்பு அறிக்கை தாக்கல் செய்த மருத்துவா் ஆகியோா் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனா். நீதிமன்றம் விசாரணைக்காக கொடுத்த கால அவகாசம் முடிவடைவதால், வியாழக்கிழமை மாலை, நீதிமன்றத்தில் 5 போலீஸாரும் ஆஜா்படுத்தப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com