பாலமேடு அருகே முடுவார்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
ஊராட்சித் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அழகு, ஒன்றியக் கவுன்சிலர் மதலையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் மீனாட்சிசுந்தரம் தலைமையிலான மருத்துவக்குழுவினர் மாணவ மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளை வழங்கினர்.
பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊட்டச்சத்து குறைபாடு தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் சுகாதார ஆய்வாளர் ராமர், வார்டு உறுப்பினர்கள், மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.