சுடுநீரில் காயமடைந்த பெண் ஊழியர் சாவு

சுடுதண்ணீர் கொட்டியதில் காயமடைந்த பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
Published on
Updated on
1 min read

சுடுதண்ணீர் கொட்டியதில் காயமடைந்த பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

மதுரை அண்ணா பஸ் நிலையப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார். இவரது மனைவி பிரேமா(26). மதிச்சியம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார்.

சில நாள்களுக்கு முன்பு உணவகத்தில் சுடுதண்ணீர் கொட்டியதில் பிரேமா மற்றும் கோமதி, ஜெயந்தி ஆகியோர் காயமடைந்தனர்.

அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரேமா உயிரிழந்தார்.

பிரேமாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மதிச்சியம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com