நடிகர் விஜய்யின் பிறந்த நாள் போஸ்டர் ஒட்டிய தகராறில் ரசிகரை வெட்டியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
மதுரை சக்கிமங்கலம் கல்மேடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் விக்னேஷ்வரன் (19). நடிகர் விஜய் ரசிகர். அப்பகுதியில் விஜய் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரை கடந்த 23-ஆம் தேதி ஒட்டியுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த போஸ் என்பவர் எதிர்த்துள்ளார். இதுதொடர்பாக முருகேசன் சிலைமான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போஸýம், அவரது நண்பர் பொன்ராஜும் சேர்ந்து முருகேசன், விக்னேஸ்வரன் ஆகியோரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் வெட்டுக் காயமடைந்த முருகேசன், விக்னேஸ்வரன் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிலைமான் போலீஸார் வழக்குப்பதிந்து போஸ், பொன்ராஜைக் கைது செய்துள்ளனர்.