சனிக்கிழமை(ஜூன் 28) புனித ஷாபான் 29 நாள்கள் நிறைவு பெறுகிறது. அன்று இரவு புனித ரமலான் பிறை தென்படுவதற்கு வாய்ப்புள்ளது என, மதுரை தலைமை காஜியார் ஏ.சையது காஜாமௌனுதீன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை: பருவ மாற்றத்தின் காரணமாக பிறை தென்படுவதில் சிரமம் ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே, பிறை காணும் வாய்ப்புப் பெற்றவர்கள் உடனடியாக காஜியார்(எனது) தொலைபேசி எண்:2337070 அல்லது பள்ளிவாசல் தொலைபேசி எண்:2337904 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என தெரிவித்துள்ளார்.