அமில வீச்சில் காயமடைந்த கல்லூரி மாணவிக்கு முகச் சீரமைப்புச் சிகிச்சை

திருமங்கலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் அமிலம் வீசியதில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு முகச் சீரமைப்பு
Published on
Updated on
1 min read

திருமங்கலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் அமிலம் வீசியதில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு முகச் சீரமைப்பு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

  மதுரை மாவட்டம், திருமங்கலம் சின்னபூலாம்பட்டியைச் சேர்ந்தவர் மீனா. திருமங்கலம் அரசு கல்லூரி முதலாண்டு மாணவி. கடந்த 12ஆம் தேதி இவரும், அங்காளஈஸ்வரி என்ற இரண்டாமாண்டு மாணவியும் கல்லூரி விட்டு வெளியே வந்தபோது அங்கு நின்ற இளைஞர் திடீரென தான் வைத்திருந்த அமிலத்தை மாணவியர் மீது ஊற்றினார்.

  இதில், மீனா, அங்காளஈஸ்வரி ஆகியோர் காயமடைந்தனர். மீனாவுக்கு முகம், கழுத்து உள்ளிட்ட பகுதியிலும், அங்காளஈஸ்வரிக்கு தோள் உள்ளிட்ட பகுதியிலும் காயமேற்பட்டது.

  திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தீவிர சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்து சங்கரநாராயணன் என்பவரைக் கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் போலீஸார் கூறினர்.

  இந்நிலையில், அமில வீச்சில் காயமடைந்த மாணவியர் தற்போது சிறப்பு சிகிச்சைப் பிரிவான 209ஆவது வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புண் ஆறிய நிலையில், மாணவி மீனாவுக்கு பிளாஷ்டிக் அறுவைச் சிகிச்சைப் பிரிவு மூலம் முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அங்காளஈஸ்வரிக்கும் தோள்பட்டையில் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மருத்துவர்கள் கூறினர்.

கைதானவருக்கும் சிகிச்சை: மாணவியர் மீது அமிலம் வீசியதாக கைதான இளைஞர் சங்கரநாராயணன் தற்போது மதுரை அரசு மருத்துவமனை மனநல சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தனி அறையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக மருத்துவர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com