மதுரை, செப்.23: மதுரையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது.
மதுரை நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் திங்கள்கிழமை பகலில் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் திடீரென மழை பெய்தது. ஆனால், நகரில் சில இடங்களில் மழை தூறலாக பெய்ததாக மக்கள் கூறினர்.
மழை அளவு (மில்லிமீட்டரில்) மதுரை நகர் 6, குப்பணம்பட்டி 10, வாடிப்பட்டி ஆண்டிப்பட்டி பங்களா 25, சாத்தையாறு அணை 37, மேட்டுப்பட்டி 36, கள்ளந்திரி 21, விரகனூர் 3.6 ஆகும்.
செவ்வாய்க்கிழமை பகலில் வழக்கம்போல வெயில் கொளுத்தியது. மாலையில் திடீரென மேகமூட்டத்துடன் இடி மின்னலுடன் மழை பெய்தது. விரகனூர் உள்ளிட்ட ஊரகப்பகுதிகளில் மிதமான மழை பெய்த நிலையில், மதுரை மாநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. மழையுடன் காற்றும் வீசியது.
இதுபோல மாலையில் மழை தொடர்ந்தால் நிலத்தடி நீர்மட்டமாவது உயரும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.