சுடச்சுட

  

  மதுரை மாவட்டத்தில் 118 பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

  By dn  |   Published on : 30th July 2014 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரம்ஜான் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் 118 பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா மைதானங்களில் செவ்வாய்க்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

   இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு இருத்தல், ரம்ஜான் மாதத்தில் பின்பற்றப்படுகிறது. நோன்பின் நிறைவு நாள் ரம்ஜான் பண்டிகையாகக் கொண்டாடப்படும். ஷவ்வல் பிறை தென்பட்டதையடுத்து செவ்வாய்க்கிழமை ரம்ஜான் பண்டிகையாக அறிவிக்கப்பட்டது.

   மதுரையில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து நோன்புப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். உறவினர்களுக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

   ரம்ஜானையொட்டி அனைத்து பள்ளிவாசல்கள், ஈத்கா மைதானங்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அரசரடி ஈத்கா மைதானத்தில் தலைமை ஹாஜி மெüலவி சையத் காஜா முயீனுத்தீன் தலைமையில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

  தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் தமுக்கம், மீனாம்பாள்புரம், தத்தனேரி, சுப்பிரமணியபுரம், மகபூப்பாளையம் ஆகிய இடங்களில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. தமுமுக சார்பில் யு.சி. பள்ளி மைதானம், வில்லாபுரம் உள்ளிட்ட இடங்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

   மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல், நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல், தெற்குவாசல் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 118 பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

   தொழுகையில் பங்கேற்றவர்கள் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai