Enable Javscript for better performance
ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூ.2.10 லட்சம்:பறக்கும் படையினர் கைப்பற்றி விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூ.2.10 லட்சம்:பறக்கும் படையினர் கைப்பற்றி விசாரணை

    By dn  |   Published on : 27th March 2014 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உரிய ஆவணங்களின்றி வேனில் கொண்டுவந்த ரூ.2.10 லட்சத்தை தேர்தல் கண்காணிப்பு பறக்கும்படையினர் புதன்கிழமை இரவு கைப்பற்றினர்.

    திண்டுக்கல்லைச் சேர்ந்த சமையல் எண்ணெய் விற்பனையாளர் சுப்பிரமணியன். இவர், கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி, திருப்பத்தூர் சுற்றுவட்டார கடைகளுக்கு சமையல் எண்ணெய் விநியோகித்து பணம் வசூலித்துக்கொண்டு, கொட்டாம்பட்டி வழியாக திண்டுக்கல் சென்றார்.கொட்டாம்பட்டியில் துணை வட்டாட்சியர் சங்கர் தலைமையிலான பறக்கும்படையினர் மற்றும் போலீஸôர் வாகனங்களை தணிக்கை செய்தனர். அப்போது சுப்பிரமணியன் வந்த வேனிலிருந்த பையில் ரூ.2 லட்சத்து பத்தாயிரத்து ஐநூற்று எண்பது இருந்ததைக் கைப்பற்றினர். பணத்துக்கு உரிய ஆவணங்கள் சுப்பிரமணியனிடம் இல்லை. அதனால், பணத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai