Enable Javscript for better performance
இடைத் தேர்தல் வழக்கில் சாமி எம்எல்ஏ ஆஜர்- Dinamani

சுடச்சுட

    

    திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திருமங்கலம் இடைத் தேர்தல் வழக்கு சம்பந்தமாக மேலூர் எம்எல்ஏ சாமி உள்ளிட்ட 15 பேர் புதன்கிழமை விசாரணைக்கு ஆஜரானார்கள்.

            திருமங்கலம் இடைத்தேர்தலின் போது கடந்த 29.12.2008-இல் எலியார்பத்தி பகுதியில் பஸ்கள் மீது கல்வீசி தாக்கி பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக ஓ.பன்னீர்செல்வம், மேலூர் எம்எல்ஏ சாமி உள்ளிட்ட 67 பேர் மீது கூடக்கோவில் எஸ்ஐ சத்யபிரபா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்காக எம்எல்ஏ சாமி உள்ளிட்ட 15 பேர் திருமங்கலம் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் முன்பு ஆஜரானார்கள். ஜூன் 18-ஆம் தேதி சாமி எம்எல்ஏ உள்ளிட்ட 15 பேரையும் ஆஜராகுமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai