Enable Javscript for better performance
ஊழியரிடம் லஞ்சம் வாங்கியதாக அஞ்சலக துணைக் கண்காணிப்பாளர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஊழியரிடம் லஞ்சம் வாங்கியதாக அஞ்சலக துணைக் கண்காணிப்பாளர் கைது

    By dn  |   Published on : 27th March 2014 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலூர் உட்கோட்ட அலுவலகத்தில் அஞ்சல் ஊழியரிடம் லஞ்சம் வாங்கிய தாக துணைக் கண்காணிப்பாளரை சிபிஐ போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.

    மதுரை மாவட்டம், மேலூரில் தலைமைத் தபால் நிலையத்தில் அஞ்சலக துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. இங்குள்ள துணைக் கண்காணிப்பாளர் முருகேசன் கிராமப்புற அஞ்சல் நிலையங்களை அவ்வப்போது ஆய்வுசெய்வது வழக்கம்.

    அழகர்கோவில் அருகே காதக்கிணறு அஞ்சல் நிலையத்தில் கடந்த வாரம் முருகேசன் ஆய்வு செய்தாராம். அப்போது அங்கு பணிபுரிந்த அஞ்சல் ஊழியர் வீரணன், பணம் கையிருப்பு குறைவாக வைத்திருந்தாராம். இக் குறைவை முருகேசன் பதிவுசெய்துவிட்டு வந்தாராம். இதில் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என வீரணன் வலியுறுத்தினாராம்.

     நடவடிக்கைகளை நிறுத்தி, கைவிட தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என முருகேசன் நிபந்தனை விதித்தாராம். இதையடுத்து, வீரணன் மதுரை சிபிஐ அதிகாரிகளிடம் புகார் செய்தார். அவர்கள் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை வீரணனிடம் அளித்து, முருகேசனிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

    மேலூர் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முருகேசனிடம் வீரணன் பணம் கொடுத்தபோது மறைந்திருந்த சிபிஐ போலீஸôர், முருகேசனைக் கைது செய்தனர்.  சிபிஐ போலீஸôர் வழக்குப் பதிவுசெய்து முருகேசனிடம் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai